டிச.13 முதல் பொறியியல் செமஸ்டர் தேர்வு- அண்ணா பல்கலை

 
anna university

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Few takers for Anna University's online exam proposal - DTNext.in

மதுரையில் செமஸ்டர் தேர்வை ஆன்லைன் வாயிலாக நடத்த வேண்டும் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பரவல் காரணமாக வகுப்புகளை ஆன்லைன் வாயிலாக நடத்திவிட்டு, தேர்வுகளை மட்டும் நேரடி தேர்வாக நடத்துவது ஏற்புடைவது இல்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டினர். 

இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13 ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும், இண்டர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். இதனால் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முறையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆன்லைனில் தேர்வுகளை நடத்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.