அரசு பாலிடெக்னிக், ஐடிஐகளில் படித்தவரா நீங்கள்? மெட்ரோவில் வேலை! உடனே இண்டர்வூயூக்கு போங்க...

 
metro metro

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் 118.9 கிலோமீட்டர் தொலைவிற்கு, மூன்று வழித்தடங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

metro

இந்த இரண்டாம் கட்ட திட்டத்தில் மெட்ரோ ரயில் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் 5,870 கோடி மதிப்பில் 12 ஆண்டுகளுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.  மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் முதற்கட்டமாக சென்னை பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையில் இந்த ஆண்டு இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில் அங்கு பணியாற்றும் பணியாளர்களை தேடும் பணியில் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் இறங்கியுள்ளது. 

அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசு அல்லது அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் மற்றும் அரசு அல்லது அரசு உதவி பெறும் ஐடிஐ- களில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு மேற்பார்வையாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் நாளை தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரையிலும், கோவையில் நவம்பர் 10,11 தேதியிலும், அதேபோல மதுரையில் நவம்பர் 13,14 தேதிகளிலும் நடைபெற உள்ளது. இதில் மிக முக்கியமாக தனியார் பாலிடெக்னிக் மற்றும் தனியார் ஐடிஐ நிறுவனத்தில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு தகுதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.