மழைக்காலங்களில் கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்த மின்சார வாரியம் உத்தரவு
மழைக்காலங்களில் கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்த அனுமதி அளித்து மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில், மழைக்காலங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, மாநிலம் முழுவதும் அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உட்பட 5,580 பேர் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில், மழைக்காலங்களில் கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்த அனுமதி அளித்து மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதிக பாதிப்பு ஏற்படும் வட்டங்களில் பிரிவுக்கு 4 பேரும், மற் வட்டங்களில் பிரிவுக்கு 2 பேரையும் பணியில் அமர்த்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 30ம் தேதி வரை 90 நாட்களுக்கு பணியில் அமர்த்தி கொள்ள மண்டல தலைமை பொறியாளர்களுக்கு அனுமதி அளித்து மின்சார வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

