மின் கம்பத்திற்கு பதிலாக மரத்தில் கம்பிகளை பதித்து மின் இணைப்பு- அமைச்சர் விளக்கம்

 
ஃப்

நெல்லை மாவட்டம் அம்பையில் மின் கம்பத்திற்கு பதிலாக மரத்தில் கம்பிகளை பதித்து மின் இணைப்பு செய்யப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...  

நெல்லை மாவட்டம் அம்பையில் மின் கம்பத்திற்கு பதிலாக மரத்தில் கம்பிகளை பதித்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மரக்கிளைகளை ஊடுருவி கம்பிகள் செல்வதால், ஈரப்பதமான பச்சை மரங்களில் மின்சாரம் பாய வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்த மக்கள், அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன்பாக மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.


இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ள மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “நெல்லை அம்பாசமுத்திரத்தில், மரத்தில் இன்சுலேட்டர் பொருத்தப்பட்டு மின் கம்பிகளை பதித்து மின் இணைப்பு வழங்கப்படுவதாக செய்தி வெளியான நிலையில், மின் வாரிய அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, உடனே மின்கம்பம் அமைக்க உத்தரவிட்டேன்.  இந்நிலையில், அதற்கான பணிகள் தற்போது நிறைவுபெற்று, பாதுகாப்பான வகையில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.