ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - தேர்தல் அதிகாரி மாற்றம்!

 
erode

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

முதல் 17ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. 18ம் தேதி நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 55 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.  அதிமுகவில் இருந்து சுயேச்சையாக போட்டியிட்ட செந்தில் முருகன் தனது மனுவை திரும்ப பெற்றார். அடுத்தடுத்து சில சுயேச்சைகள் மனுக்களை திரும்ப பெற்றனர். இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த மணீஷ் மாற்றப்பட்டு ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் ஓட்டு உள்ள பத்மாவதி என்ற சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. முதலில் 47 வேட்பாளர்கள் போட்டி என அறிவிக்கப்பட்டு, பிறகு பத்மாவதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் நீண்ட நேரம் தாமதம் ஏற்பட்டது. இந்த சர்ச்சை காரணமாக தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்.