‘கண்டிப்பா ஓட்டு போடணும்; கால் 1950’ : தேர்தல் ஆணையத்தின் புதிய விழிப்புணர்வு வீடியோ!

‘கண்டிப்பா ஓட்டு போடணும்; கால் 1950’ : தேர்தல் ஆணையத்தின் புதிய விழிப்புணர்வு வீடியோ!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வாக்களர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் புதிய ஹெல்ப் லைன் நம்பரை அறிமுகப்படுத்தி தமிழக தேர்தல் ஆணையம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘கண்டிப்பா ஓட்டு போடணும்; கால் 1950’ : தேர்தல் ஆணையத்தின் புதிய விழிப்புணர்வு வீடியோ!

தமிழகத்தில் வரும் ஏப்ரம் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக வாக்குச்சாவடிகள், வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்த மாதம் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான புதிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

‘கண்டிப்பா ஓட்டு போடணும்; கால் 1950’ : தேர்தல் ஆணையத்தின் புதிய விழிப்புணர்வு வீடியோ!

வீடியோவில், வாக்காளர் அட்டை குறித்த விவரங்கள் தெரியாத நண்பர்கள் ஒரு பார்க்கில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் முதியவர், அவர்களுக்கு தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய ஹெல்ப் லைன் நம்பரை அறிமுகப்படுத்துகிறார். நமது மாவட்ட எஸ்.டி.டி கோர்டுடன் சேர்த்து 1950 என்ற எண்ணை அழைத்தால், தேர்தல் ஆணையம் நமது சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்து வைக்கும் என்று அவர்களிடம் சொல்கிறார்.

‘கண்டிப்பா ஓட்டு போடணும்; கால் 1950’ : தேர்தல் ஆணையத்தின் புதிய விழிப்புணர்வு வீடியோ!

வாக்காளர் அட்டை காணாமல் போனாலோ அல்லது நமது வாக்குச்சாவடியை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றாலோ அந்த ஹெல்ப் லைன் எண்ணை அணுகி முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறுகிறார். மேலும், புதிய வாக்காளர் அட்டை வாங்க வேண்டும் என்றால் www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியை அணுகி வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணைய அதிகாரி சொல்வது போல வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

‘கண்டிப்பா ஓட்டு போடணும்; கால் 1950’ : தேர்தல் ஆணையத்தின் புதிய விழிப்புணர்வு வீடியோ!

வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும், வாக்குச் சாவடியை அறிந்து கொள்ளவும், தேர்தல் தேதி, குறைகள் ஏதேனும் இருப்பின் அதனை பதிவு செய்யவும் 1950 என்ற இலவச வாக்காளர் உதவி அழைக்கவும் என வீடியோவின் இறுதியில் சொல்லப்பட்டிருக்கிறது.