ஊராட்சிமன்ற தலைவர்கள் பதவிக்காலம் - ஆட்சியருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்..

 
மாநில தேர்தல் ஆணையம்


 ஊராட்சிமன்ற தலைவர்கள் பதவிக்காலம் 2026ல் தான் முடிவடைகிறது என  கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தேர்தலாணையம் கடிதம் எழுதியுள்ளது.  

உள்ளாட்சி தேர்தலில் தேர்வான ஊராட்சிமன்ற தலைவர்களின் பதவிக்காலம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  2021ல் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வான பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026ல் முடிவடைகிறது என குறிப்பிட்டுள்ளது.   டிசம்பர் 2024ல் முடிவதாக தகவல் வெளியாகியுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 32 பேர் மாநில தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.  

தனி மாவட்டமாக மாறுகிறது ‘கள்ளக்குறிச்சி’ – சட்டப்பேரவையில் ஈபிஎஸ் அறிவிப்பு

2021ல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் பதவிக்காலம்  19.10.2026ல் தான் முடிவடைகிறது என்றும், பதவிக்காலம் குறித்து ஐயம் தெரிவிக்கும் கடிதங்கள் மாநில தேர்தல் ஆணையத்துக்கு வருவது தவிர்க்க வேண்டிய ஒன்று என்றும் தெரிவித்துள்ளது.  கிராம ஊராட்சி தலைவர்களுக்கு இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும், குழப்பம் அடைய வேண்டாம் என்று கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் உத்தரவிட்டுள்ளது.