வெந்நீரில் விழுந்து மூதாட்டி பலி! திருவள்ளூரில் சோகம்

திருவள்ளூர் அருகே கால் இடறி கொதிக்கும் வெந்நீரில் விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலியானார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மனைவி சரஸ்வதி (70). இவர் கடந்த 7 ஆம் தேதி அன்று காலை தனது வீட்டின் வாசலை துடைப்பத்தால் சுத்தம் செய்த போது கால் இடறி அருகே அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சுட தண்ணீரில் தவறி விழுந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கேஎம்சி அரசு மருத்துவமனையில் 21 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். ஏற்கனவே கணவர் மற்றும் மாமனார் இறந்த நிலையில் மாமியாரும் இருந்த நிலையில் மருமகள் குழந்தைகள் உடன் நிற்கதியாக தவித்து வருவது அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.