மசாஜ் சென்டரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 8 பேர் கைது

 
rape

புதுச்சேரியில் மஜாஜ் சென்டரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை காவலர், பைனான்சியர் ஆகியோரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். 

massage

புதுச்சேரி அண்ணாநகரில் இயங்கி வந்த மசாஜ் சென்டரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அங்கு விபச்சார தொழில் நடப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதில் ஒருவர் 17 வயது சிறுமி என்பது தெரிய வந்தது. 

பின்பு சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், அவரை பாலியல் பலாத்காரம் செய்த 40 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள், விபரங்களை சேகரித்தனர். இதை தொடர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்த இந்திய கடலோர காவல்படை காவலர் ஜெகத்ரட்சகன், செய்யாறு பகுதியை சேர்ந்த பைனான்சியர் சீனுவாசன்  ஆகியோரை உருளையன்பேட்டை  போலீசார் கைது செய்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 32 பேரை கைது செய்யும் பணியில் போலீசார் இறங்கி உள்ளனர்.