‘70 வயசாகிட்டு, முடியல’... நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கதறல்
திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரான எடப்பாடி பழனிசாமி, நீதிபதி முன் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை எனக் கூறிருந்தார். இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை கூறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தொகுதி நிதியில் 95 சதவீதம் பயன்படுத்தியதை குறிப்பிட்டு அது இணையதளத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனவே எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றவியல் அவதூறு வழக்கில் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேலு முன்பு ஆஜரான எடப்பாடி பழனிசாமி, “70 வயதாகிவிட்டது, உடல்நிலை பாதிப்பு அதிகம் இருக்கிறது. உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துவருகிறேன். 70 வயது மூத்த குடிமகன் என்பதால் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
-