“எங்களுக்கு மக்கள் நலனில் அக்கறை; திமுகவுக்கு ரெய்டு நடுத்துவதில் அக்கறை”

 

“எங்களுக்கு மக்கள் நலனில் அக்கறை; திமுகவுக்கு ரெய்டு நடுத்துவதில் அக்கறை”

திருப்பத்தூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் போட்டி வேட்பாளர்களுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கே பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஆறு ஒன்றிய கட்சி நிர்வாகிகள் வேட்பாளர்களுடன் கலந்துகொண்டனர்.

“எங்களுக்கு மக்கள் நலனில் அக்கறை; திமுகவுக்கு ரெய்டு நடுத்துவதில் அக்கறை”

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்ற வில்லை, அதிமுக முந்தைய ஆட்சிக் காலத்தில் செய்த சாதனையை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொது மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். கல்விக்கடன், விவசாய கடன், நகைக்கடன் ஆகியவை தள்ளுபடி செய்வதாக ஸ்டாலின் கூறினார். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அதனை செய்யவில்லை. ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெற பாடுபடுங்கள்

அரசு பள்ளி மாணவர்கள், கிராம மக்கள், நடுத்தர குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் கடந்த கால ஆட்சியின் சாதனைகளை வேட்பாளர்கள் எடுத்து சொல்லவேண்டும். அதிமுக ஆட்சியில் மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டது. ஆனால் திமுக ஆட்சி வந்தபிறகு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு விடுவதிலேயே கவனம் செலுத்திவருகிறது.” எனக் குற்றஞ்சாட்டினார்.