"எம்ஜிஆர் காலத்திலேயே உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டன" - அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

 
துரைமுருகன்

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உபரிநீர் பயன்பாட்டு திட்டத்திற்காக திப்பம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தையும் அவர் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் தேர்தல் நேரத்தில் அவசரகதியில் தொடங்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆரின் வளர்ப்பு, கலைஞரின் தொண்டன்! அமைச்சர் துரைமுருகனின் அரசியல்  பயணம்...| Political journey of minister Duraimurugan

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் அரைகுறையாக விடப்பட்டதால் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே செல்கிறது. உபரிநீர் திட்டத்தை திமுக ஆட்சிதான் முழுமையாக நிறைவேற்றும். மேலும் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட பிறகு உபரிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எம்ஜிஆர் காலத்திலேயே உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டன. முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த திமுகதான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.

முல்லை பெரியாறு அணை பிரச்னையில் கேரள அரசின் தந்திரத்தை புரிந்து கொள்ள  வேண்டும்- Dinamani

கேரள, கர்நாடகத்தில் தமிழ்நாட்டின் நீராதாரங்களை பாதிக்கும் எந்த புதிய அணையும் கட்ட திமுக ஒருபோதும் அனுமதிக்காது” என்றார். இதையடுத்து தர்மபுரி சென்று ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நிலவரம் குறித்தும் அமைச்சர் ஆய்வுசெய்தார். அங்கு பேசிய அவர், "காவிரியாற்றின் குறுக்கே அணைகள் கட்டுவது தொடர்பான முயற்சி நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. தடைகளைக் களைந்து  ராசிமணல் பகுதியில், காவிரியாற்றின் குறுக்கே அணை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.