"வீட்டில் யாரும் இல்லை; சோதனைக்கு எந்த துறை வந்துள்ளார்கள் என தெரியவில்லை"- துரைமுருகன்

 
காவிரி ஒழுங்காற்று வாரியம் இரட்டை நிலை எடுக்கிறது- துரைமுருகன்

யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை. வீட்டில் யாரும் இல்லை தெரிந்த பிறகு கருத்து சொல்கிறேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன்

காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “வீட்டில் யாரும் இல்லை. சோதனைக்கு எந்த துறை வந்துள்ளார்கள் என தெரியவில்லை. இந்த சோதனை தொடர்பாக உங்களுக்கு எந்த அளவு தெரியுமோ அதே அளவுதான் எனக்கும் தெரியும். வந்திருக்கிற அதிகாரிகள் யார் என்று வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு தெரியவில்லை. காட்பாடி சென்ற பிறகு தான் சோதனை குறித்து தெரியவரும்” என்றார்.