இயல்பான அளவுக்கு மேல் மழை பெய்தால் ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்தாலும் பாதிப்பு ஏற்படும்- துரை வைகோ

 
durai vaiko

இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் நாங்கள் எதிர்க்கிறோம், இருமொழிக் கொள்கையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது, மும்மொழி கொள்கை என்றால் இந்தியை ஏன் நீங்கள் திணிக்கிறீர்கள்... என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

Image

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அதேபோன்று புதுக்கோட்டை மேட்டுப்பட்டி திருமலைராய சமுத்திரம் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைவைகோ, “மழை, வெள்ள பாதிப்பிலிருந்து சிறந்த முறையில் செயல்பட்டு பொதுமக்களை தமிழ்நாடு முதல்வர் பாதுகாத்துள்ளார். பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தாலும் உடனடியாக அதை அப்புறப்படுத்தும் பணியில் முதலமைச்சர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பாக செய்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாகவே மழைநீர் வெள்ளப் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 4000 கோடி ரூபாய் இதற்காக செலவு செய்யப்பட்டுள்ளது. இயல்பான அளவுக்கு மேல் மழை பெய்தால் 4000 கோடி அல்ல 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு செலவு செய்தாலும் பாதிப்பு ஏற்படும். காலநிலை மாற்றத்தால் வரலாறு காணாத மழை தற்போது பெய்து வருகிறது. வரும் காலங்களில் சுற்றுச்சூழலை பாதுகாத்து காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப திட்டமிட்டால் தான் பொதுமக்களை நாம் காப்பாற்ற முடியும். நிவாரண பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

MDMK Confident in Seat-Sharing Talks with DMK, Expects Fair Allocation

அமைச்சரவை கூடி எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கதக்கது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக இது போன்ற நடவடிக்கைகளை ஆளுநர் எடுக்காமல் அரசியல் செய்து வந்தார். ஆளுநரால் பல தடைகள் தமிழ்நாட்டிற்கு வருகிறது. இனிவரும் காலங்களில் ஆளுநர் அமைச்சரவை கூடி எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்று சேர வேண்டும். இந்த தீர்ப்பானது ஆளுநருக்கு ஒரு குட்டு. நாங்கள் இந்தியை திணிப்பிற்கு தான் எதிர்ப்பே தவிர இந்திக்கு எதிர்ப்பு கிடையாது. இருமொழிக் கொள்கைதான் திராவிட இயக்கத்தில் ஊறிப் போனது. இரு மொழி கொள்கை இருக்கும் போது தான் இன்று உலக அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் புகழ் பெற்றவர்களாக விளங்குகின்றனர் அதற்கு காரணம், ஆங்கில புலமை இருந்தது தான்.  இன்றைக்கு முன்மொழிக் கொள்கையை நீங்கள் அறிமுகப்படுத்துகிறீர்கள்... ஏன் மூன்றாவது மொழியாக இந்தியை திணிக்கிறீர்கள்? மூன்றாவது மொழி ஏன் உலக மொழியாக இருக்கக் கூடாது? ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றோடு சேர்த்து ஒரு வெளிநாட்டு மொழி படித்தால் என்ன தவறு?” எனக் கேள்வி எழுப்பினார்.