விஜய் டிவியில் பங்கேற்க பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்- எச்சரிக்கை விடுக்கும் விஜய் டிவி நிர்வாகம்

 
விஜய்

விஜய் டிவியில் பங்கேற்க பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என விஜய் டிவி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெப்சி தொழிலாளர்களுக்கு விஜய் டிவி ரூ. 75 லட்சம் நிதியுதவி - Little talks -  Entertainment News Website

இதுதொடர்பாக விஜய் டிவி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்காக டிஸ்னி ஸ்டார் மற்றும்/அல்லது ஸ்டார் விஜய் (“அலைவரிசை"), அல்லது தயாரிப்பாளர்கள் அல்லது தயாரிப்பு நிறுவனம் பணம் கேட்பதில்லை, மேலும் எந்த ஒரு நபர்(கள்) மற்றும்/அல்லது நிறுவனம் மற்றும்/அல்லது அமைப்பு ஆகியோருக்கு எங்கள் அலைவரிசையில் ஒளிபரப்பப்படும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தோன்றுவதற்கான வாய்ப்பை, பணம் செலுத்தியோ அல்லது வேறு வகையிலோ, வழங்கவோ/செயல்படுத்தவோ நாங்கள் அங்கீகாரம் அளிக்கவில்லை. ஸ்டார் விஜய் பெயரைப் பயன்படுத்தி வரும் இத்தகைய போலியான வாய்ப்புகள் மற்றும் அழைப்புகளிலிருந்தும் மற்றும் அல்லது இந்த அலைவரிசையின் பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு நபர்/நிறுவனம்/ அமைப்பு போன்றவை எங்களுடைய எந்த ஒரு நிகழ்ச்சியிலாவது வாய்ப்பை உறுதியளித்து தனிப்பட்ட புகைப்படங்களையோ, காட்சித் துணுக்குகளையோ அல்லது பணத்தையோ கோருபவர்களிடமிருந்தும் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம். 

இத்தகைய தவறான நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் உங்களால் செலுத்தப்பட்ட பணம் அல்லது பகிரப்பட்ட தனிப்பட்ட தகவல்களால் உங்களுக்கு ஏற்பட்ட மற்றும்/அல்லது ஏற்படக்கூடிய எந்த விதமான இழப்பு/சேதம் ஆகியவற்றுக்கு இந்த நிறுவனம் மற்றும்/அல்லது அலைவரிசை எந்த ஒரு விதத்திலும் பொறுப்புள்ளதாகவோ மற்றும்/அல்லது கடமைப்பட்டுள்ளதாகவோ இருக்காது