அரசின் ஊக்கத் தொகையில் மாணவிகள் மது அருந்துகின்றனரா?
'பேருந்தில் போட்டிபோட்டு கொண்டு மது அருந்தும் மாணவிகள். மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து டாஸ்மாக் வழியே வாங்கும் அரசு' என்ற காணொளி சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுவருகிறது.
இது முற்றிலும் வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த காணொளி கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே எடுக்கப்பட்டது. ஆனால், 2022 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட 'புதுமைப் பெண்' திட்டம் கல்லூரி மாணவிகளுக்கானது, பள்ளி மாணவிகளுக்கு அல்ல. மேலும், இக்காணொளி வெளியானபோதே, பள்ளி கல்வித்துறை மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் தரப்பில் மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.
அரசின் ஊக்கத் தொகையில் மாணவிகள் மது அருந்துவதாகப் பரவும் வதந்தி!@CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/JBWe90Yvjn
— TN Fact Check (@tn_factcheck) August 13, 2024
மாணவர்களின் அடையாளங்களை மறைக்காமல், பழைய காணொளியை சமூக ஊடகங்களில் பரப்புவது சட்டப்படி குற்றமாகும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.