வருகிற 10ம் தேதி தி.மு.க. மாணவர் அணி கூட்டம்!
Jan 4, 2025, 20:30 IST1736002816000
தி.மு.க. மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் வருகிற 10ம் தேதி நடைபெறும் என திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 10-01-2025 வெள்ளிக்கிழமை, மாலை 04.30 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில், எனது தலைமையில், மாநில மாணவர் அணித் தலைவர் இரா.ராஜீவ்காந்தி - இணைச் செயலாளர்கள் சி. ஜெரால்டு, எஸ். மோகன் மற்றும் துணைச் செயலாளர்கள் மன்னை த. சோழராஜன், சேலம் ரா. தமிழரசன், அதலை பி. செந்தில்குமார், கா. அமுதரசன், பி.எம். ஆனந்த், கா. பொன்ராஜ், வி.ஜி. கோகுல், திருமதி பூர்ணசங்கீதா, திருமதி ஜெ. வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.