சரி, இன்னைக்கு speech மனப்பாடம் பண்ணியாச்சா? இல்லை...- விஜய்யை கலாய்க்கும் திமுக
சரி, இன்னைக்கு speech மனப்பாடம் பண்ணியாச்சா? இல்லை, இதிலும் தவறு நடந்தால் அதை எப்படி அடுத்தவர்கள் மீது பழி போடலாம் என்ற point கிடைக்காமல் உங்கள் script writer தடுமாறிக் கொண்டு இருக்கிறாரா? என முதல்வர் விஜய்க்கு திமுக ஐடி விங் கேள்வி எழுப்பியுள்ளது.
Oxymoron-க்கு முகமிருந்தால் அது Toxic Vettri Kazhagam போலத்தான் இருக்கும்!
— DMK IT WING (@DMKITwing) June 9, 2026
பெண்கள் பாதுகாப்புக்கு 'சிங்கப்பெண் படை' என தனக்குத் தெரிந்த அதே சினிமா பாணியில் ஒரு buildup.
சமீபத்தில் தூத்துக்குடியில் வேலே வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது TVK நிர்வாகிகள்.… pic.twitter.com/903oudOF1o
இதுதொடர்பாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “Oxymoron-க்கு முகமிருந்தால் அது Toxic Vettri Kazhagam போலத்தான் இருக்கும்! பெண்கள் பாதுகாப்புக்கு 'சிங்கப்பெண் படை' என தனக்குத் தெரிந்த அதே சினிமா பாணியில் ஒரு buildup. சமீபத்தில் தூத்துக்குடியில் வேலே வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது TVK நிர்வாகிகள். அதை மறைக்க TVK MLA கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, இப்படி ஒன்று நடக்கிறது என்பதே கூட தெரியாத இந்த டம்மி CM தான், இந்தப் படையைத் தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப் போகிறாராம்!இதுதான் உங்களின் Women Safety லட்சணமா?
Social media-வில் நியாயமான கேள்வி கேட்டால் கூட பெண்களின் குடும்பத்தார் வரை இழுத்து ஆபாசமாக வசைபாடும் உங்களின் 'Abusive Warriors'-ஐ அரவணைத்துக்கொண்டு, நீங்க பெண்களைக் காக்கப் போகிறீர்களா? It's pure hypocrisy! திமுக ஆட்சியின் Pink Patrol வாகனங்களுக்கு 'சிங்கப்பெண் படை' என்று புதுசா Sticker ஒட்டுவதும், பெண் காவலர்களின் Uniform-ஐ மாற்றுவதும் தான் உங்க பிரம்மாண்ட திட்டமா? வெறும் PR Optics & Narrative விளம்பரங்கள் நிஜ பாதுகாப்பை தராது. இத்திட்டத்தின் Launch-ஐ காரணமே இல்லாமல் பலமுறை ஒத்திவைத்ததிலேயே உங்களின் அலட்சியம் அப்பட்டமா தெரியுது. இந்த படைக்கு தனியாக ஒதுக்கப்பட்ட Budgetary Allocation எவ்வளவு? இது புது நிதியா? இல்ல பழைய Police funds-ஐ பிரித்துச் செய்யும் கண்துடைப்பா?
New vehicles, CCTV integration மற்றும் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதற்கு எந்த Data-வும் அரசிடம் இல்லை. உங்கள் Abusive warriors-க்கு அத்துப்படியான Cyber crimes-ஐ தடுக்க, கையாள அதற்கான Training Modules & SOPs எங்கே? கேமரா முன் ஆக்ரோஷமாக dialogue பேசி Acting பண்ணுவதும், Sticker ஒட்டுவதும் வெற்று கைதட்டலை வேணா பெற்றுத் தரும். But where is the real women safety? சரி, இன்னைக்கு speech மனப்பாடம் பண்ணியாச்சா? இல்லை, இதிலும் தவறு நடந்தால் அதை எப்படி அடுத்தவர்கள் மீது பழி போடலாம் என்ற point கிடைக்காமல் உங்கள் script writer தடுமாறிக் கொண்டு இருக்கிறாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

