‘தலித் சமூகத்தினருக்கு பாதுகாப்பு இல்லை’- திமுக எம்பி கட்சியிலிருந்து விலகல்

 
ன்

தலித் சமகத்தினருக்கு எதிரான குற்றங்களில் நீதி கிடைக்கவில்லை என்றும், முதல்வர் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்களுக்கு போஸ்டர் ஒட்டும் நிலை வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும் கூறி, சேலம் மத்திய மாவட்ட திமுக ஐடி விங் நிர்வாகி எழில் அரசன் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

Image

இதுதொடர்பாக திமுக ஐடி விங் நிர்வாகி எழில் அரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்டக் கழகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியில் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய ஒன்றிய பிரதிநிதியாக செயல் பட்டு வந்த சேலம் MP.எழில்அரசன் ஆகிய நான் 04.02.2025 இன்று முதல் கீழ்காணும் காரணங்களால் கட்சியில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன்.

Image

• திமுக ஆட்சிகளில் தலித்களுக்கு பாதுகாப்பு இல்லை, கட்சியில் எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை.

• பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை, இதற்கு நாங்கள் தயாராக இல்லை.

எனவே இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது நாள்வரை ஒத்துழைப்பு நல்கிய கழக உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி., நன்றி.!” எனக் குறிப்பிட்டுள்ளார்.