உதயநிதிக்கு வாழ்த்துகள்! நான் அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை- கனிமொழி

 
கனிமொழி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி,திமுஅ துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்  இன்று தமிழக துணை முதல்வராக பதவியேற்றார். அவர் துணை முதல்வராக பதவியேற்கவுள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி,திமுஅ துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., “முதலமைச்சருக்கு தெரியும் யாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று…  அதனால்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பினை வழங்கி இருக்கிறார். துணை முதல்வர் நியமனம் என்பது முதலமைச்சரின் முடிவு. அட்வைஸ் யாருக்கும் அவசியம் இல்ல எல்லாருக்கும் என்ன பண்ணனும்னு தெரியும். நான் யாருக்கும் அட்வைஸ் கொடுப்பதில்லை. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.