சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா..! - பாட்டு பாடிய மாஸ் காட்டிய மு.க.ஸ்டாலின்

 
ச்

அதிமுக முதுகில் ஏறி அரசியல் பண்பாட்டு படையெடுப்பை நடத்துகிறது பாஜக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

திருநெல்வேலி தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நமது இலக்கு ஒன்றுதான், அது திராவிட மாடல் ஆட்சி 2.0. இந்த ஸ்டாலின் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டான். உங்கள் உழைப்பும், அர்ப்பணிப்புமே கழகத்தின் வெற்றிக்கு அஸ்திவாரம். மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து திமுகவின் திட்டங்களை ஈபிஎஸ் காப்பியடிக்கிறார். மக்கள் விரோத, சிறுபான்மை விரோத சட்டங்களை ஆதரித்து, நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து போட்டு, தமிழ்நாட்டின் நிதி உரிமை, மாநில உரிமையை அடகுவைத்ததை நினைத்தாலே மக்கள் மீண்டும் அச்சப்படுவார்கள். அதிமுக முதுகில் ஏறி அரசியல் பண்பாட்டு படையெடுப்பை நடத்துகிறது பாஜக.

மகளிருக்கு திமுகவைவிட அதிக தொகையை தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தபோதும் மக்கள் நம்பவில்லை. எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் செய்யமாட்டார். சொந்தமாகவும் செய்யமாட்டார். திமுகவின் ட்தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஸ்டார்” என்றார்.