திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம் தொடங்கியது!
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் தொடங்கியது.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 20ம் தேதி திமுக உயர்நிலை செயல் திட்ட கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னதாக அறிவித்து இருந்தார். அதன்படி அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் கட்சியின் உயர்நிலை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களை நடத்துவது குறித்தும் ஆலோசனை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்தும், மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.