அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி கைது

 
கொலை

சேலம் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

tt

சேலம் மாவட்டம், தாதகாபட்டியை அடுத்த சஞ்சீவி ராயன் பேட்டையைச் சேர்ந்தவரும், கொண்டலாம்பட்டி மண்டலக் குழு முன்னாள் தலைவரும், கொண்டலாம்பட்டி பகுதிக் கழக செயலாளருமான சண்முகம், நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது அங்கே மறைந்திருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்தது. கொலையாளிகள் அந்தப் பகுதியில் உள்ள தெரு விளக்குகளை துண்டித்தும், அங்குள்ள CCTV கேமராக்களை உடைத்தும், திட்டமிட்டு கொடூரமான முறையில் அவரை படுகொலை செய்தனர். 

இந்நிலையில் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் திமுக நிர்வாகி சதீஷை காவல்துறை கைது செய்தது. 5 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், திமுக நிர்வாகி சதீஷ் உட்பட 9 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்திவருகிறது. கஞ்சா விற்பனையில் சதீஷ் ஈடுபட்டுவந்ததாக சண்முகம் போலீசில் புகார் கொடுத்ததால் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. சேலம் அதிமுக பகுதி செயலாளர் கொலை வழக்கில் மாநகராட்சி   கவுன்சிலர் தனலட்சுமி, அவரது கணவர் சதீஷ்  உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் மாநகராட்சி 55 வது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி மற்றும் அவரது கணவர் சதீஷ் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவுன்சிலரின் கணவர் சதீஷ் உள்ளிட்ட 10 பேர் தற்போது வரை  கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  கவுன்சிலர் தனலட்சுமி உள்ளிட்ட நான்கு பேரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.