"செந்தில் பாலாஜி வழக்கை நேரடியாக கண்காணிப்போம்" - உச்சநீதிமன்றம்
செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கிய தகவலை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்குகளை ஒராண்டுக்குள் நிறைவு செய்ய உத்தரவிடக் கோரி Y.பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், விசாரணை அறிக்கையை, உயர்நீதிமன்ற பதிவாளர் வாயிலாக, எம்.பி., எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம் நீதிமன்றத்தில் வழக்கு வந்தவுடன் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி அளித்துள்ளாரா? என உச்சநீதிமன்ற நீதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். ஆகவே செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கில் விசாரணை விரைவில் தொடங்கப்படும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், செந்தில்பாலாஜி வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையை நேரடியாக கண்காணிப்போம். விசாரணை எவ்வாறு நடக்கிறது என அவ்வப்போது அறிக்கை பெற்று மேற்பார்வை செய்ய முடியும் என்று கருத்து தெரிவித்தனர்.