"இடுப்பில் கட்டிய துண்டை தோளில் போட வைத்தது திமுக"- துரைமுருகன்

 
துரைமுருகன்

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் திமுகவின் 75வது ஆண்டு பவள விழா, கழக முப்பெரும் விழா நாளை நடைபெற்றுவருகிறது. ஆண்டுதோறும் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நிகழ்வும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க விழாவும் நடைபெறவது வழக்கம். இந்த ஆண்டு திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா ஒரு சேராக நடைபெற்றுவருகிறது. 

திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன், “இடுப்பில் கட்டிய துண்டை தோளில் போட வைத்தது திமுக. சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியதும் திமுகதான். நம்மை காலணியை போட வைத்தது திமுகதான். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் என்னுடன் களத்தில் நின்றவர்கள், இன்று திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் பெறுகிறார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. கருணாநிதி வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கிவருகிறார்.
 

நீண்ட வரலாறு உள்ள தி.மு.கழகத்திற்கு வரும் இளைஞர்களை மனமார வரவேற்கிறேன். எங்களுக்கு பிறகு கட்சியை நீங்கள்தான் காக்க வேண்டும். இளையவர்கள் வந்தால்தான் கட்சியை அடுத்து நடத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும்” என்றார்.