திமுக துணைபொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா?

 
tn

திமுகவில்  வகித்து வந்து  துணைபொதுச் செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

tn

 திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வருவதால் சுப்புலட்சுமி ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது இத்தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பாஜக வேட்பாளர் சரஸ்வதி இடம் தோல்வியை தழுவினார் தனது தோல்விக்கு ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகள் செய்த சதி செயலே காரணம் என்று கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் திமுக தலைமைக்கு கடிதம் கொடுத்ததாக தெரிகிறது. இருப்பினும் இந்த கடிதத்தின் மீது திமுக தலைவர்  ஸ்டாலின் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியில் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் கேட்டுள்ளார். இருப்பினும் அதுவும் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

tn

நீண்ட காலமாக கட்சியில் செல்வாக்கு  இல்லாமல் பயணிப்பதாக எண்ணி வருத்தத்தில் இருந்த அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சில தினங்களுக்கு முன்பு சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் திமுக தலைமை கடுமையாக விமர்சித்து தனது முகநூலில் கருத்து பதிவிட்டு இருந்தார் . வரும் அக்டோபர் மாதம் திமுக பொதுக்குழு கூடும் நிலையில் அதற்கு முன்பாகவே சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தெரிகிறது இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.