திமுக முப்பெரும் விழாவில் 2 பெரிய நாற்காலிகள்- தொண்டார்களுக்கு இன்ப அதிர்ச்சி

 
கரு

திமுக முப்பெரும் விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தோன்றினார்.

அ

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் திமுகவின் 75வது ஆண்டு பவள விழா, கழக முப்பெரும் விழா நாளை நடைபெற்றுவருகிறது. ஆண்டுதோறும் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நிகழ்வும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க விழாவும் நடைபெறவது வழக்கம். இந்த ஆண்டு திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா ஒரு சேராக நடைபெற்றுவருகிறது. இதில் இரண்டு பெரிய நாற்காலிகள் வைக்கப்பட்டிருந்தது பேசுபொருளானது. 

இந்நிலையில் இந்த இரண்டு பெரிய நாற்காலியில் ஒன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், மற்றொன்று ஏ.ஐ.தொழில்நுட்பத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பக்கத்தில் ஒரு பெரிய இருக்கை தயார் செய்து அதில், கருணாநிதி இருப்பது போல் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்பட்டிருந்தது. திமுக பவள விழாவில் AI மூலம் கலைஞர் கருணாநிதி மேடையில் உரையாற்றியது தொண்டர்களை உற்சாகமடைய செய்தது.