கையில் வெள்ளி வேலுடன் களத்தில் இறங்கிய பிரேமலதா

 
கையில் வெள்ளி வேலுடன் களத்தில் இறங்கிய பிரேமலதா

2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் முதல் நாளான இன்று, பிரேமலதா விஜயகாந்த் திருத்தணியில் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

பரப்புரையில் உரையாற்றிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “திருத்தணி முருகனை நேரில் சந்தித்து வெற்றிவேலை அவரது பாதத்தில் வைத்து கும்பிட்டுதான் பரப்புரைக்கு வந்துள்ளேன். திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைக்கும். தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற லட்சியத்தில் திமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக தேர்தலை சந்திக்கிறது. முருகன் ஆசியுடன் பங்குனி உத்திர நாளில் பரப்புரையை தொடங்குகிறேன். 2011ல் தேமுதிக வென்ற திருத்தணியில் 2026ல் வரலாறு திரும்ப வேண்டும். ஆம்பூர் சர்க்கரை ஆலையில் பிறந்து வளர்ந்தவள் நான்... திருத்தணியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை கொண்டுவருவோம். முதல்வர் அறிவித்த ரூ.8,000 கூப்பன் திட்டம் மகளிருக்கு மிகவும் பயனுள்ளது.