“கோவாவுக்கு நடிகைகூட போய் போட்டோ எடுக்கிறவங்களாம் காணாமல் போவார்கள்”- விஜய்யை சாடிய திண்டுக்கல் லியோனி

 
க்

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்ல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளர் கமலேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் கலந்து கொண்டு பெண்கள், இளைஞர்கள் என  1500 பேருக்கு   விளையாட்டு உபகரணங்கள், தையல் இயந்திரம் உள்ளிட்ட  நலத்திட்ட உதவிகளை வழங்கினர் நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் லியோனி கூறுகையில் திமுக கொண்டு வந்த திட்டத்தினால் மக்கள் வெகுவாக பயனடைவதாகவும் 2026லும் திமுக பெருவாரியான வாக்குகள் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார். 


அதிமுக பொதுக்குழுவை கடுமையாக விமர்சித்தார் காலி குடங்களில் எப்போதும் சத்தம் வந்து கொண்டு தான் இருக்கும் அது போன்று தான் எடப்பாடியும் அவரை சார்ந்தவர்களும். அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் அவர் வருங்கால முதல்வர் என தொண்டை தண்ணீர் வாற்றும் வரை முன்னாள் அமைச்சர்கள் கோஷம் இடுகின்றனர்..   "யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்" பாடலை பாடி எடப்பாடி பழனிசாமியை  விமர்சித்து பாடல் வரிகளை சேர்த்து பாடல் பாடினார் யார்ரா அந்த பழனிசாமி நான் தான் அந்த பழனிசாமி பத்து தடவை தோற்றவன், யார்ரா அந்த பழனிசாமி நான் தான் அந்த பழனிசாமி கூவத்தூரில் கூத்தடிச்சு எல்லாருக்கும் துரோகம் பண்ணி கால்ல விழுந்து ஆட்சியை  புடிச்சவன் என கிண்டல் அடிக்க பொதுமக்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.. புதிதாக கட்சி ஆரம்பித்த அந்த நடிகர் மேடையில் Mp3 ரெக்கார்டை ஆன் பன்னிவிட்ட மாதிரி வரலாறு பதிவுகளையும், புள்ளி விவரங்களை பேசுபவர் நான் இல்லை என கூறுபவர்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் ,அதானி கொள்ளை குறித்து பேச மறுப்பதும், தேசத்தில் நடக்கும் மக்கள் பிரச்சனைகளில் தலையிடாமல் கோவாவிற்கு சென்று திருமண வரவேற்பில் போட்டோ பிடிப்பவர்கள் எல்லாம் காணாமல் போவார்கள் என தவெக கட்சி தலைவரை மறைமுகமாக சாடி பேசினார்.