வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில்.. டிஜிபி பரபரப்பு உத்தரவு!

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில்.. டிஜிபி பரபரப்பு உத்தரவு!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு நிறைவடைந்த நிலையில், உடனுக்குடன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில்.. டிஜிபி பரபரப்பு உத்தரவு!

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே ராணுவப் படையினர், ஆயுதப் படையினர், உள்ளூர் காவல் துறையினர் உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், அதை கண்காணிக்க எல்இடி திரையும் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களில்.. டிஜிபி பரபரப்பு உத்தரவு!

இந்த நிலையில், நாள் ஒன்றுக்கு 5 முறையாவது வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை சோதனையிட வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது, அறைகளுக்கு போடப்பட்ட சீல் சேதமடையாமல் இருக்கிறதா என்பதையும் போலீசார் பாதுகாப்பு பணியை முறையாக செய்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். மேலும், சிசிடிவி கேமராக்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.