பெண் காவலர்கள் இனி வழிநெடுக காத்திருக்க வேண்டாம்… ஸ்டாலின் சொன்னதால் டிஜிபி அதிரடி உத்தரவு!

பெண் காவலர்கள் இனி வழிநெடுக காத்திருக்க வேண்டாம்… ஸ்டாலின் சொன்னதால் டிஜிபி அதிரடி உத்தரவு!

முதல்வர் அல்லது விஐபிக்கள் அலுவல் ரீதியாக பயணிக்கும் போது பாதுகாப்பு பணியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். ஆண்களுக்கு நிகராக பெண் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இந்த நிலையில், சாலை பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் ஈடுபடுவதில் இருந்து விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெண் காவலர்கள் இனி வழிநெடுக காத்திருக்க வேண்டாம்… ஸ்டாலின் சொன்னதால் டிஜிபி அதிரடி உத்தரவு!

முதல்வர் மற்றும் விஐபிக்களின் பாதுகாப்பு பணியில் பெண்கள் வழி நெடுக காத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பு பணியில் இருந்த பெண்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் காவல்துறைக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன் படி, தற்போது டிஜிபி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை மண்டல ஐஜி, ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பெண் காவலர்கள் இனி வழிநெடுக காத்திருக்க வேண்டாம்… ஸ்டாலின் சொன்னதால் டிஜிபி அதிரடி உத்தரவு!

இதற்கு முன்னதாக, கொரோனா காலத்தில் கர்ப்பிணி காவலர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட காவலர்களின் பணிச் சுமையைக் குறைக்கும் விதமாக நேரடியாக களத்திற்கு சென்று பணியாற்ற கூடிய பணிகளை ஒதுக்க வேண்டாம் என்றும் அதிக பணிச்சுமை கூடிய பணிகளை ஒதுக்க வேண்டாம் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது சாலையோரம் பெண்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டாம் என ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் டிஜிபி இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.