பெண்களின் கல்விக்கு திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 
Udhayanidhi

புதுமைப்பெண் திட்டத்தின் வெற்றிக்கு தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை விகிதமே சாட்சி என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப்பள்ளிகள் மட்டுமன்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவியரும், மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுகிற வகையில், #புதுமைப்பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்து, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்கள். ஏற்கனவே, மாதந்தோறும் 2.98 லட்சம் மாணவியர் இத்திட்டத்தால் பயன்பெற்று வரும் நிலையில், இனி கூடுதலாக 75 ஆயிரம் மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறவுள்ளனர்.


புதுமைப்பெண் திட்டத்தின் வெற்றிக்கு தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை விகிதமே சாட்சி. சமூகத்தில் சரி பாதி இருக்கும் பெண்களின் கல்விக்கு நம் #திராவிட_மாடல் அரசு என்றும் துணை நிற்கும். புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கம் மூலம், பயன்பெறுகின்ற அத்தனை தங்கைகளுக்கும் என் அன்பும், வாழ்த்தும் என குறிப்பிட்டுள்ளார்.