இன்று கரையைக் கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..

 
rain

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தன் தாழ்வு மண்டலம் இன்று  கரையைக் கடக்க உள்ள நிலையில்,  தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று(செப்.8)  காலை, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக வலுப்பெற்றது.  தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே 280 கி.மீ, ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு - தென்கிழக்கே 230 கி.மீ தொலைவில் மையம்  கொண்டுள்ளது.  

நாகை, கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

இது வடக்கு திசையில் நகர்ந்து வழக்கு ஒடிசா- மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று மாலை கரையைக் கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை / இரவு ஒடிசா ( பூரி கடற்கரை) மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம் (தீகா) கடற்கரை இடையே கரையை கடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென  வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் கூறியுள்ளது.  அத்துடன் சென்னை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் நாகை துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. மேலும்., இன்று முதல் 12ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக  கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.