"சீதாராம் யெச்சூரி மறைவு! செவ்வணக்கம் தோழரே"- முதல்வர் ஸ்டாலின்
சீதாராம் யெச்சூரியின் மறைவு வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், இந்திய அரசியலில் மிக உயர்ந்த தலைவருமான தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், துயரும் அடைந்தேன். தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் அஞ்சாநெஞ்சினராக மிள இளம் வயதில் இருந்தே நியாயத்துக்காகப் போராடும் தலைவராக இருந்தார். மாணவத் தலைவராகத் துணிச்சலுடன் நெருக்கடி நிலையை அவர் எதிர்த்து நின்றதே இதற்குச் சான்றாகும்.
Deeply shocked and saddened by the demise of Comrade #SitaramYechury, a stalwart of the Left Movement and a towering figure in Indian politics.
— M.K.Stalin (@mkstalin) September 12, 2024
Comrade @SitaramYechury was a fearless leader whose commitment to justice was evident from a young age, as he courageously stood… pic.twitter.com/7LiWoBJNpu
பாட்டாளி வர்க்கத்தின் நலன், மதச்சார்பின்மை, சமூகநீதி, சமத்துவம் மற்றும் முற்போக்குக் கருத்தியல்கள் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பினால் வார்க்கப்பட்ட அவரது புகழ்வாய்ந்த அரசியல் வாழ்க்கை அடுத்து வரும் பல தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும். அவருடனான கருத்தாழமிக்க கலந்துரையாடல்கள் என்றும் என் நெஞ்சுக்கு நெருக்கமானதாக நிலைத்து நிற்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது இதயபூர்வமான இரங்கலை இக்கடினமான வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன். செவ்வணக்கம் தோழரே!” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களவை குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.