90 வயது முதியவரை நடுரோட்டில் விட்டு சென்ற மருமகள்!

90 வயது முதியவரை ரோட்டில் விட்டு சென்ற மருமகளின் செயல் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மதிச்சியம் ஆழ்வார்புரம் செல்லும் வழியில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல் முன்பு 90 வயது மதிப்புள்ள முதியவர் ஒருவர் மழை குளிரில் நடுங்கிய படி இருந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் மதுரை ரெட் கிராஸ் அமைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளனர் தகவலின் அடிப்படையில் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் ரெட் கிராஸ் அமைப்பினர் இணைந்து, அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் முதியவரிடம் விசாரிக்கையில் அவர் ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் என்றும் பெயர் குபேந்திரன் தந்தை பெயர் வெங்கடாசலம் என்றும் தெரிய வந்தது. டெய்லர் வேலை செய்து வந்ததாகவும் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், மகன் மருதுபாண்டி ஆர்ட்டிஸ்ட் வேலை பார்த்து வருவதாகவும் மருமகள் ஆட்டோவில் ஏற்றி வந்து இங்கே விட்டு விட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
நடுரோட்டில் விட்ட மருமகள்... கலங்க வைத்த முதியவரின் வார்த்தைகள் -ஆட்சியர் அதிரடி உத்தரவு#Madurai #Collector #ViralVideo pic.twitter.com/LAJbEsXw8V
— Thanthi TV (@ThanthiTV) January 19, 2025
90 வயது அடைக்க முதியவரை மருமகள் ஆட்டோவில் வந்த அழைத்துச் சென்று ஆடு மாடுகளுக்கு நடுவில் இறக்கிவிட்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தரப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.