பல ஆண்களுடன் சேர்ந்து மகளை.. தாய்க்கு 10 ஆண்டுகள் சிறை

 
aஅ

பெற்ற மகளை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த தாய் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.    சிறுமி கொடுத்த புகாரின் பேரில் மேலும் பலர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 சென்னையைச் சேர்ந்த வசந்தி என்ற பெண்  தனது 15 வயது மகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கிறார்.  தனக்கு விருப்பமில்லை என்று அந்த சிறுமி சொல்லியும் துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்திருக்கிறார்.    இதனால் வேறு வழியின்றி வீட்டில் இருந்து வெளியேறி தப்பித்துச் சென்று ஆந்திராவிற்கு சென்றிருக்கிறார்.  

 அங்கு ஒரு பழம் விற்கும் மூதாட்டியிடம் தனது நிலைமையைச் சொல்லி அழ,  அந்த மூதாட்டி சிறுமியை அவருடனேயே தங்க வைத்திருக்கிறார்.   பழம் விற்கும் மூதாட்டியுடன் இருந்த சிறுமியை பார்த்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.

 சந்தேகத்தின்பேரில் சிறுமியை அழைத்து யார் எந்த ஊர் என்று விசாரித்தபோது பதட்டத்தில் இருந்திருக்கிறார்.  அவற்றை புரிந்து கொண்ட போலீசார் மேலும் மேலும் துருவி துருவி விசாரித்ததில் உண்மையை சொல்லி இருக்கிறார் அந்த சிறுமி.  

ஆஅ

 இதை எடுத்து  சென்னையில் சிறுமியின் வீடு இருக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் ஆந்திரா போலீசார் தொடர்புகொள்ள,   இதையடுத்து அந்தக் சிறுமியை போலீசாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

 போலீசார் விசாரணையில் சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறுமியின் தாய் வசந்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் சிறுமியின் தாய் வசந்திக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.    சம்பந்தப்பட்ட மேலும் பலரும் தலா ஏழு ஆண்டுகளும், 10 ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 

 சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய,  அதை  போலீஸ் தரப்பில் எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சி தெளிவாக உள்ளது .அவரது தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிகிறது.  அதனால் வசந்திக்கு 10 ஆண்டுகள் தண்டனை விதித்த நீதிபதி மற்றவர்களுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.