“சென்னை அருகே கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்” - வானிலை ஆய்வாளர்

 
“சென்னை அருகே கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்” - வானிலை ஆய்வாளர் 

பெங்கல் புயல் பலத்த மழையுடன் சென்னை அருகே 30ந்தேதி கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

 பிபர்ஜாய் புயல் எதிரொலி: 22 பேர் காயம்; 940 கிராமங்கள் இருளில் மூழ்கின..

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 30ஆம் தேதிக்குள் பரங்கிப்பேட்டை, கடலூர் மற்றும் சென்னை இடையே கரையை கடக்கக்கூடும். நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை பகுதியில் கனமழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கே கடந்து வருவதால், இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


நாளை காலை 11.00 மணிக்குள் புயலாக வலுபெறும். நாளை காலை 6.00 மணி முதல் 8.00 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதியில் மிதமான மழை தொடங்கும். நேரம் செல்ல செல்ல மழை படிபடியாக அதிகரிக்கும். நாளை மறுநாள் காலை 11.00 மணிக்குள் தீவிரப்புயலாக வலுபெறும். நாளை இரவு மிக-கனமழை தொடங்கி காற்றின் வேகம் அதிகரிக்கும். நாளை மறுநாள் 100 கி.மீ வேகத்தில் மிக-கனமழை, அதி-கனமழை பெய்யக்கூடும். நவம்பர்  30 ஆம் தேதி நள்ளிரவு முதல் அதிகாலைக்குள்  100 அல்லது 120 கிமீ க்கு மேல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.