"திமுக சாவிலும் அரசியல் செய்கிறது"- முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

 
cv shanmugan

சாவில் கூட திமுக அரசியல் செய்வதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

என்னுடைய மூத்த மகனை இழந்துவிட்டேன்” - ராமதாஸிடம் கண்கலங்கிய அமைச்சர் சி.வி. சண்முகம்| i lost my eldest son says c v shanmugam

திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம், “விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மையப்பகுதியில் நகராட்சி தகன மையம் அமைந்துள்ளது. இந்த தகன மையத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆய்வு மேற்கொண்டார். அதிமுக ஆட்சி காலத்தில் தன் சொந்த செலவில் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட அதிமுக சார்பில் தகன மேடைக்கு 50 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது. அந்த நிதியிலிருந்து சுற்றுப்புற சூழலை சுத்தப்படுத்தி தகன மேடையை நவீனப்படுத்தி மின் விளக்குகள் அமைக்கப்பட்டு அமைதியான சூழல் நிலவ வழி வகை செய்யப்பட்டது.

இதனை பராமரிக்கும் பணி தொண்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போது திமுகவினர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தகன மேடையில் கூட அரசியல் செய்ய துவங்கிவிட்டனர். திண்டிவனத்தில் வசிக்கும் திமுகவினர் இறந்தால் கூட இந்த தகன மேடையில் தான் பயன்படுத்த வேண்டும், அதை மனதில் வைத்துக் கொண்டு தகனமேடை வளாகத்தை பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் அழைத்து நீங்கள் நகராட்சி கமிஷனிடம் பேசுங்கள், தகனமேடை பணி மேற்கொள்ள வேண்டும் மேற்கொள்ளவில்லை என்றால் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும்”  என கூறினார்.

இந்த ஆய்வின் போது திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன், வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, திண்டிவனம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் கே .வி.என் வெங்கடேசன் மற்றும் அதிமுக மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.