“கலைஞர் சமாதியை பார்க்க ஒரு நாய் கூட செல்வதில்லை”- சி.வி.சண்முகம்

எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதியை பார்ப்பது போல் அந்த கலைஞர் சமாதியை பார்க்க ஒரு நாய் கூட செல்வதில்லை அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூறினார்.
அதிமுக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மந்தகரை திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இன்று யார் யாரோ எம்ஜிஆர் பெயரை சொல்லி அரசியல் பேசி எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்போம் என்று கூறி வருகின்றனர். புதுசா கட்சி ஆரம்பித்தவர்கள் கூட எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவேன் என்று சொல்கிறார்கள். அதே போன்று பாரத பிரதமராக இருந்தாலும் அப்படி தான் பேசி வருகின்றனர் என்று பேசினார்.
மேலும் பேசிய சி.வி சண்முகம், எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளை ஏராளமான மக்கள் திரண்டு பார்த்து வருகின்றனர். ஆனால் அங்கு ஒரு சமாதி உள்ளது அதை ஒரு நாய் கூட சென்று பார்க்கவில்லை என சர்ச்சையாக சி.வி சண்முகம் பேசினார்.