தவெக பொதுக்கூட்டம்: நுழைவாயிலில் கூட்ட நெரிசல்!.

 
Q Q
தவெக பொதுக்கூட்டம், புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் இன்று (டிச.09) நடைபெறுகிறது. கூட்டத்திற்கு வரும் தொண்டர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஸ் இல்லாதவர்களை காவல்துறை உள்ளே அனுமதிக்கவில்லை. ஒரு பாஸ் வைத்திருந்தால் 2 பேர் வரலாம் என நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர். ஆனால், பாஸ் வைத்திருக்கும் ஒருவருக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி என காவல்துறை கூறியுள்ளது.
இந்நிலையில், கட்டுப்பாட்டை மீறி பல்வேறு தொண்டர்கள் குவிந்ததால், கூட்டம் நடைபெறும் நுழைவு வாயிலில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், தொண்டர்கள் வரிசையில் வரும்படி பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.