தமிழகம் முழுவதும் இன்று மாட்டு பொங்கல் உற்சாக கொண்டாட்டம்!!

 
ttn

தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. 

mattu

பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் பொங்கல் பண்டிகை யானது நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புதுப்பானையில், புத்தரசியிட்டு, பொங்கலிட்டு மக்கள் சூரியனை வணங்கி விமர்சையாக கொண்டாடினர்.  

tn

இந்நிலையில் தைப்பொங்கலுக்கு மறுநாள் தமிழர்களால் மாட்டுப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழவுக்கு பெரிதும் உதவும் வகையில் மக்களின் வாழ்வில் ஒன்றிய மாட்டிற்கு நன்றி தெரிவிப்பதாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.  இன்றைய தினத்தில் வீடுகளில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி,  சுத்தம் செய்து அதன்  கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அலங்கரித்து பொங்கல் உள்ளிட்ட பொருட்களைப் படைத்து தமிழர்கள் அழகு பார்ப்பார்கள். அதேசமயம் தென் மாவட்டங்களில் இன்றைய தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி என்பது மிக விமர்சையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.