சாரல் திருவிழாவில் ஆணழகன் போட்டி
சாரல் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளில் பளு தூக்குதல், ஆணழகன் போட்டி மற்றும் கோல்ப் போட்டிகள் நடைபெற்றன.
குற்றாலத்தில் சீசன் நடைபெறும் தருவாயில் சாரல் திருவிழா 4 நாட்கள் நடத்தப்படுகிறது. மூன்றாம் நாளான இன்று காலை ஆண்களுக்கான பளு தூக்குதல் போட்டியும், ஆணழகன் போட்டியும் கலைவாணர் அரங்கில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் இதை துவக்கி வைத்தனர்.பின்னர் ஆணழகன் போட்டி நடந்தது. வயது பிரிவின் அடிப்படையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்றவர்கள் தங்களது உடல் வலிமையையும் கட்டுடலையும் வெளிப்படுத்தும் விதமாக சிறு சிறு பயிற்சியை செய்து தங்களது வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான கோலப்போட்டி குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் நடந்தது. ஏராளமான பெண்கள் இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நாளை சாரல் திருவிழாவில் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், சிறுதானிய உணவு தயாரிப்பு போட்டிகளும் நடக்கிறது. நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு வருவாய் மற்றும் இயற்கை பேரிடர் துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.