மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த சதீஷ்க்கு தூக்கு தண்டனை!
சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதீஷ்க்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக சதிஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கின் குற்றவாளி சதீசுக்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு 3 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்தபிறகு
2 முறை தூக்கிலிட அல்லிகுளம் மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரநாத் ஜெயபால், சிபிசிஐடி மிகச்சிறப்பாக இவ்வழக்கில் விசாரித்து குற்றத்திற்கான தூண்டுதலைக் கண்டறிந்ததால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை, 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ₹35,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்ணின் குடும்பத்தினருக்கு ₹10 லட்சம் நிவாரணமாக வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கூறினார்.