‘ஐஐடி கொரோனா பாதிப்பு எதிரொலி’: அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு பரிசோதனை!

‘ஐஐடி கொரோனா பாதிப்பு எதிரொலி’: அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு பரிசோதனை!

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கு அறிகுறி இருந்ததால், விடுதிகளில் தங்கி இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

‘ஐஐடி கொரோனா பாதிப்பு எதிரொலி’: அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு பரிசோதனை!

சென்னை ஐஐடி கல்லூரியின் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் 4 பேருக்கு முதலில் கொரோனா உறுதியான நிலையில், அவர்கள் மூலமாக 87 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது. இதைத் தொடர்ந்து, தற்போது பாதிப்பின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிற மாணவர்களுக்கும் கொரோனா பரவாத வண்ணம், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கல்லூரி வளாகத்தில் இருக்கும் அனைத்து துறைகளும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கல்வி கற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘ஐஐடி கொரோனா பாதிப்பு எதிரொலி’: அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு பரிசோதனை!

இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் விடுதியில் தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சியை சேர்ந்த மருத்துவ குழுவினர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பரிசோதனை செய்கின்றனர்.