மதுரை மருத்துவ கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா !

 

மதுரை மருத்துவ கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா !

மதுரை மருத்துவ கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

மதுரை மருத்துவ கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நேற்று ஒரேநாளில் 1,661 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 47ஆயிரத்து 41ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்றோ ஒரேநாளில் 23 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 360ஆக அதிகரித்துள்ளது.இந்த சூழலில் பள்ளி, கல்லூரி மாணவ , மாணவிகளும் அதிகளவில் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மதுரை மருத்துவ கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா !

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 5 மாணவிகளுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு மாணவிகள் தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவர்கள் 2 பேர் 4ஆம் ஆண்டு மாணவருக்கு கொரோனா உறுதியான நிலையில்தற்போது மேலும் 5 பேருக்கு தொற்று உறுதியாகி பாதிப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. இதனால் மற்ற மாணவ – மாணவிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கபப்பட்ட நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மாணவ மாணவிகளுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் சில பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு வருவது கட்டாயம் இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது