வரியை உயர்த்திய மத்திய அரசு- சமையல் எண்ணெய் விலை உயர்வு

 
oil

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  சமையல் எண்ணெய் விலை உயர்வுக்கு பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

oil

சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை அதிரடியாக  ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது. நாடுமுழுவதும் சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயரும் அபாயம் இருக்கிறது. ஒன்றிய அரசின் இந்த  அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி வரி 13.75%லிருந்து 35.75% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்படாத பாமாயில், சன் ஃபிளவர் ஆயிலுக்கான இறக்குமதி வரி 5.5%லிருந்து 27.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

இறக்குமதி வரி அதிகரிப்பால் சமையல் எண்ணெய் விலை நாடுமுழுவதும் கிடுகிடுவென எண்ணெய் விலை உயர்ந்த நிலையில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயருகிறது. இதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர்.