“ஆட்சியில் பங்கு வேண்டும்”- முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம்
காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என தவெக மாநாட்டில் விஜய் பேசியதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சரவணன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சரவணன் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழக முதல்வரும் இந்தியா கூட்டணி கட்சி தமிழக தலைவருமான மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்! தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில்2026யில் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார். ஆகவே தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும்.
தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள் எனவே தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள் எனவே தமிழக மக்களின் என்னத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


