காமராஜர் கண்ட கனவை நனவாக்கியவர் ராஜீவ்காந்தி- செல்வப் பெருந்தகை

 
செல்வ பெருந்தகை

பெருந்தலைவர் காமராஜர் கண்ட கனவை எல்லாம் நனைவாக்கி திட்டங்களை தீட்டியவர் தலைவர் ராஜீவ் காந்தி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை புகழாரம் சூட்டியுள்ளார்.

ஹெச்.ராஜாவை தமிழக மக்களே நாட்டை விட்டு வெளியேற்றுவர் - செல்வப்பெருந்தகை தாக்கு..

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா கருத்தரங்கம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  தலைவர் செல்வப் பெருந்தகை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார்.

விழாவில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, “பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் 1954 ஏற்படுத்தப்பட்ட இந்த அறக்கட்டளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் சார்பாக பல்வேறு உதவி திட்டங்களை தொடர்ந்து நம்முடைய தலைவர் பெருமக்கள் செய்து வருகிறார்கள். அந்த அடிப்படையிலே தலைவர் ராகுல் காந்தி. தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அன்னை சோனியா காந்தி இவருடைய வழிகாட்டுதலிலே இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தொடங்கி வைத்த பணியை நாம் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறோம். இந்த பெருமை எல்லாம் பெருந்தலைவர் காமராஜரையே சேரும் என்று நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்


இந்த காலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். விளிம்பு நிலை மக்களுக்கு, பொதுமக்களுக்கு என்று இல்லாமல் தனக்கு என்று இருக்கின்ற காலத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் இப்படி ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து எங்கெங்கெல்லாம் அவர் சுற்றுப்பயணம் செய்கிறாரோ அங்கெல்லாம் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று சிறிது சிறிது சேமித்து இவ்வளவு பெரிய இடத்தை வாங்கி அறக்கட்டளையாக வைத்து இதில் வரும் வருமானத்தை கல்விக்காகவும் மறுத்ததற்காகவும் கொடுக்க வேண்டும் என எழுதி வைத்து சென்றிருக்கிறார் அவர் ஏற்படுத்திய இந்த அறக்கட்டளை ஏறக்குறைய 2 கோடி ரூபாய்க்கு மேல் இங்கே கல்வி உதவித்தொகையை நாம் கொடுக்க இருக்கிறோம்.

செல்வப்பெருந்தகை

பெருந்தலைவர் காமராஜர் கண்ட கனவை எல்லாம் நினைவாக்கி திட்டங்களை தீட்டியவர் தலைவர் ராஜீவ் காந்தி. விஞ்ஞான யுகப் புரட்சியின் நாயகன். இன்று டெக்னாலஜி வளர்ந்திருக்கிறது, விஞ்ஞான, மிகப்பெரிய வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கிறது, விஞ்ஞான யுகப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முதன்மையான காரணம் தலைவர் ராஜீவ் காந்தி. அதே போன்று இந்த தேசத்தின் முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கின்ற கிராமங்கள், ஊராட்சிகள், ஊராட்சியில் நல்ல ஒரு ஆட்சியில் இருக்கின்ற பொழுதுதான் தேசம் சுதந்திரம் அடையும் என  மகாத்மா காந்தி அவர்கள் சொன்னார். கிராமங்கள் தான் இந்தியாவின் ஆத்மா என்று சொன்னார் அப்படி இந்தியாவில் இருக்கின்ற கிராமங்களை எல்லாம் எப்படி உள்ளாட்சி அமைப்புகள் இருக்க வேண்டும் என்று பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை தீட்டி வந்து கடைசியில் இருக்கின்ற மனிதனுக்கும் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று  பச்சை பேனாவில் கையெழுத்து இடலாம் என்ற உரிமையை பெற்று தந்த தலைவர் நம்முடைய தலைவர் ராஜீவ் காந்தி” என்றார்.