காங்கிரஸ் மூத்த தலைவர் மரணம் : சோகத்தில் தொண்டர்கள்!

 
ttn

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஜி. விநாயக மூர்த்தி வயதுமூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 92.

death

சென்னை வண்ணாரப்பேட்டை சேர்ந்த எஸ்.ஜி. விநாயகமூர்த்தி கல்லூரி படிக்கும் போதே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  காமராஜர் ,இந்திரா காந்தி ,ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த  இவர், மூப்பனார் கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கியபோது அதில் இணைந்து கட்சியின் மேம்பாட்டிற்காக உழைத்து வந்தார்.  2006ஆம் ஆண்டில் சென்னை பூங்கா நகர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுடனும் நட்பாக பழகி வந்துள்ளார். 

ttn

இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஜி. விநாயகமூர்த்தி இன்று காலமானார்.  அவரது உடல் இன்று மாலை நொளம்பூர் மயானத்தில் அடக்கம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மூத்த தலைவர் எஸ்.ஜி. விநாயகமூர்த்தி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.