ஒரே நாடு ஒரே தேர்தல்- சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கான அடித்தளம்: ஜோதிமணி

 
jothimani

பல கட்சி ஜனநாயகத்தைப் பறித்து ஒற்றை கட்சியின் சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கான அடித்தளம்தான் இது என ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு கரூர் எம்.பி. ஜோதிமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

mp jothimani


கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி எம்பி, “ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற பாரதிய ஜனதா கட்சியின் கோஷம் தற்போது நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. இது பாரம்பரியமிக்க இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரும் போது காங்கிரஸ், இந்தியா கூட்டணி கடும் நிலைப்பாட்டை எடுக்கும். மக்களுடைய உரிமைகளை பறிக்கக் கூடிய, ஒற்றைக் கட்சியின் சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கான அடித்தளமாக இது உள்ளது.

ஒரு தேர்தல் என்பது ஓட்டு போடுவதற்காக மட்டும் அல்ல, ஒவ்வொரு மக்களும் அவர்களின் பிரச்சனைகள் மற்றும் உரிமைகளை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கின்றனர். மக்களது பிரச்சனைகள் மற்றும் உரிமைகளுக்கு ஏற்ப கிராம அளவில், நகர அளவில், மாநில மற்றும் ஒன்றிய அளவில் அரசியல் கட்சிகள் தேர்தலை நடத்தி வருகிறது. அப்போது அந்தந்த பகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு ஏற்ப மக்கள் வாக்களிக்கும் நிலை இருந்து வருகிறது.

jothimani


ஒரே நாடு ஒரே தேர்தல் என கொண்டு வரும் பட்சத்தில் இந்தியா பல்வேறு மாநிலங்களையும் பல்வேறு மொழிகளையும் இன குழுக்களையும், கலாச்சாரங்களையும் கொண்டதாகும். நமது நாட்டின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை என்பதாகும். காஷ்மீரில் உள்ள பிரச்சனை வேறு, தமிழகத்தில் உள்ள பிரச்சனை வேறு, பஞ்சாபில் உள்ள கலாச்சாரம் வேறு தமிழகத்தில் உள்ள கலாச்சாரங்கள் வேறு, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மொழி மற்றும் பிரச்சனை வேறு,  தமிழகத்தில் உள்ள மக்களின் பிரச்சனை வேறு. மக்களை பேசவிடாமல் ஒரே தேர்தல் நடத்தினால் ஒரு பிரச்சனையை மட்டுமே பேச முடியும். அதற்காக மக்கள் வாக்களிக்க முடியும். மற்ற தேவைகள் மற்றும் பிரச்சனைகளை பேசவிடாமல் மக்களை முடக்கும் அளவில் இந்த தேர்தல் இருக்கும்.

மக்களது உரிமைகளை பறித்து மக்களது வரி பணத்தில் இப்படி ஒரு தேர்தலை நடத்த பாஜக அரசு ஏற்பாடு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யும் போது காங்கிரஸ் கட்சி கடுமையான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி எடுக்கும்” என்றார்.